மைத்திரிபால சிறிசேனவை எதிரணி பொது ஜனாதிபதி வேட்பாளராக
அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவரது முகநூலினை விரும்புகின்றவர்களின்
எண்ணிக்கை அதிகரித்துவருவதை காணமுடியும். இன்று காலை வரை அவரை முகநூல்கள் பக்க விருப்புக்கள் 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பொதுவேட்பாளராக
உத்தியோகபுர்வமாக அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இந்நிலமை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரது உரை, பதிவுகளை உடனுக்குடன் அறியவே சமூகத்தளங்களில் அதிகமானர் பிரவேசித்துவருகின்றனர். ஆட்சிமாற்றத்தை வேண்டிநிற்கின்ற வடகிழக்கு மாகாண சிறுபான்மை சமூகங்களே
கூடுதலான அளவில் பொதுவேட்பாளராக களம் இறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேனவின்
முகநூலினை பார்வையிடுவதால் அக்கறை காட்டிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நாட்டில் புதிய சிந்தனை ஒன்றுடன் ஒன்றித்து போக விரும்புகின்ற
மாற்றுக்கருத்துகளில் ஆர்வம் செலுத்தி வருவோரே இதில் கூடுதலாக ஆர்வம்
காட்டி வருகின்றனர்