துபாய் சோனாப்பூர் பகுதியில் தொழிலாளர்களுக்கான ஓட்டப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டி இரண்டாம் ஆண்டாக நடத்தப்படுகிறது.
3 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என இரண்டு பிரிவுகளாக இந்த ஓட்டப்போட்டி நடைபெற்றது. போட்டியில் சுமார் 700 பேர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது. இந்த போட்டியில் தொழிலாளர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். பார்வையாளர்கள் வீரர்களை உற்சாகப்படுத்தினர். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளும் செய்யப்பட்டது.
இந்த போட்டிக்கான ஏற்கான ஏற்பாடுகளை டீம் ஸ்போர்ட்ஸ் நிறுவன நிர்வாகி மெகருன்னிசா, ரியோ ஒலிம்பிக் போட்டியில் தன்னார்வலராக பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த அகமது சுலைமான் ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்.