(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்) பழைய திரைப்பட பாடல்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த கௌரவம் படத்தில் இடம்பெற்ற நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா என்ற பாடலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அண்மையில் ஏற்பட்ட அரசியல் நிகழ்வு ஒன்றை நான் படித்த போது இந்தப் பாடல் எனக்கு திடீரென நினைவுக்கு வந்தது.. குறித்த பாடலின் பல வரிகளை மாற்றி இசை கெட்டு விடாதபடி இங்கு தருகிறேன். நீங்களும் ஒரு தடவை பாடிப் பாருங்கள்.
இந்தப் பாடலை முன்னாள் பிரதியமைச்சரும் புத்தளம் முதல்வரும் தற்போது முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டுள்ளவருமான எனது அன்பு நண்பர் பாயிஸ் பாடினால் எப்படியிருக்கும் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன்…. ஆஹா அருமை…அருமை..அற்புதம்..
எனது கற்பனையில் நகைச்சுவை கொண்ட இந்தப் பாடல் வரிகள் ஒருவரதோ அல்லது பலரினதோ மனதை அல்லது மனங்களைப் புண்படுத்துவதாக நோக்கப்பட்டால் என்னை மன்னிக்க வேண்டும். அவர்களது வேதனையிலும் பங்கேற்கிறேன்.-
--------------------------------------------------------------------------------
நீயும் நானுமா ஹக்கீம் நீயும் நானுமா?
காலம் மாறினால் நம் கனெக்க்ஷன் மாறுமா ?
நெவெர்..
நீயும் நானுமா ஹக்கீம் நீயும் நானுமா?
GUN ஐக் கொடுத்ததோ மஹிந்தவின் கௌரவம்
கையில் எடுத்ததோ பாயிஸின் கௌரவம்
நடந்ததே அந்த நாள்
முடிந்ததா பாரதம்
நாளைய புத்தளம்
ஹக்கீமே காரணம்?
நீயும் நானுமா ஹக்கீம் நீயும் நானுமா?
எனக்கொரு GUN கேட்டேன் மஹிந்தவின் உலகிலே
எடுத்து நீட்டினேன் மக்களின் நடுவிலே
வளர்த்த என் கண்ணனோ அஷ்ரஃபின் நெஞ்சிலே
மாறும் அவதாரமே ஹக்கீமின் தயவிலே
நீயும் நானுமா ஹக்கீம் நீயும் நானுமா?
ஹக்கீமின் கௌரவம் புத்தளம் நடுவிலே
அழிகின்ற சேனையோ ரிஷாத்தின் வடிவிலே
ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே
ஹக்கீமை ரிஷாத் வெல்லுமா உலகிலே?