Wednesday, December 3, 2014

3ம் தவணைக்காக 5ம் திகதி பாடசாலைகள் மூடப்படுகின்றன.


சிங்கள, தமிழ் அரசாங்க மற்றும் அரசாங்கத்தின் அனுமதியுடன் இயங்கும் தனியார் பாடசாலைகள், மூன்றாம் தவணை விடுமுறைக்காக வெள்ளிக்கிழமை(05) மூடப்படவுள்ளன.

அத்துடன் 2015ஆம் ஆண்டுக்கான முதல் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 05 திகதி முதல் ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படவுள்ளதுடன் 2015ஆம் ஆண்டுக்கான முதல் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 05 திகதி முதல் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Disqus Comments