Saturday, February 7, 2015

100 நாள் வேலை திட்ட முடிவுக்குள் புத்தளம் மாவட்டத்தின் சகல பகுதிகளுக்கும் மின்சாரம்.


(அமானி சாரா)

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வணாத்தவில்லு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 3 கிராமங்களுக்கு இன்று சனிக்கிழமை மின்சாரம் வழங்கப்பட்டது.

திரிகல் பள்ளம, விஜயபுர, கஹட்ட புளியங்குளம் ஆகிய கிராமங்களுக்கே 8 கோடி 75 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மின்சாரம் வழங்கப்பட்டன.
இன்று குறித்த கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டதன் மூலம் கிராம மக்களினது நீண்ட நாள் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இந் நிகழ்வில் மின்சக்தி எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்க பண்டார மற்று புத்தளம் தொகுதி ஐ.தே.கட்சியினது அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Disqus Comments