Sunday, February 8, 2015

40 பயணிகளுடன் பஸ்ஸைச் செலுத்திச் சென்ற சிறுவன் கைது. மதுரங்குளியில் சம்பவம்

வாகனச் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி நாற்பது பயணிகளுடன் தனியார் பயணிகள் பஸ் வண்டியைச் செலுத்திச் சென்ற 17 வயதுச் சிறுவன் ஒருவனைக் கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி பிரதேசத்தில் வைத்தே இச்சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்குத் தொடுவா பிரதேசத்திலிருந்து புத்தளம் நோக்கிப் பயணிகளுடன் பயணித்த பஸ் வண்டியினை நிறுத்திச் சோதனையிட்டதில் பஸ் சாரதியாகக் கடமையாற்றியவரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை எனறும், அவர் 17 வயதுடையவர் என்றும், அந்நேரம் பஸ்ஸினுள் நாற்பது பயணிகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதிக சந்தர்ப்பங்களில் குறித்த பஸ் வண்டியின் சாரதியாக இச்சிறுவனே பணியாற்றுவதாகவும் பயணிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Disqus Comments