நாத்தாண்டி மரந்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிலுள்ள கோழிக் கூண்டில் கோழி ஒன்று பச்சை நிறத்திலான நான்கு முட்டைகளை இட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது. எச். பி. சச்சின் என்பவருடைய வீட்டின் கோழிக்
கூண்டிலிருந்த கோழியே இவ்வாறு பச்சை நிற முட்டையிட்டுள்ளது.இதற்கு முன்னர் இவ்வாறான வித்தியாசமான நிறத்தில் தமது கூட்டிலுள்ள கோழிகள் முட்டையிட்டதில்லை என வீட்டு உரிமையாளரான சச்சின் தெரிவித்தார்.