ஆட்சி அதிகாரம் கிடைத்ததன் பின்னரான ஐக்கிய தேசிய கட்சியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் தற்போது அதன் தலைமையகமான சிரிக்கொத்தாவில்
இடம்பெறுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம்
இடம்பெறுகின்றது. இந்தக் கூட்டத்தின் போது ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைவராக மலிக் சமரவிக்ரம தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். இதற்கு முன்னர் கட்சியின் தலைவராக அமைச்சர் கபீர் ஹசீம் செயற்பட்டு வந்த நிலையில் அவர் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் கட்சியின் தலைவர் பதவி வெற்றிடமான இருந்து வந்தது.
இன்றைய கூட்டத்தின் போது எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவை கட்சியிலிருந்து நீக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகின்றது.