முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரட்ண மற்றும் முன்னாள் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து 401 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக ஜே.வீ.பி குற்றம் சுமத்தியுள்ளது. ஜே.வீ.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரட்ண மற்றும் முன்னாள் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். வெளிநாட்டிலும் இவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களின் மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகளுக்காக 2012 ஆம் ஆண்டு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.