Saturday, February 14, 2015

தனது சொந்தச் செலவில் அலரி மாளிகையில் கட்சி அமைப்பாளர்களுக்கு விருந்து வழங்கிய பிரதமர் ரணில்

ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான விஷேட கூட்டம் ஒன்று கடந்த வாரம் அலரி மாளிகையில் இடம்பெற்றது. பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமைசிங்கவின் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.


இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் அமைப்பாளர்களுக்கு அன்றைய தினம் இரவுப் போசனம் அலரி மாளிகையில் வழங்கப்பட்டது. இதில் என்ன விஷேசம் என்றால் அந்த உணவுகளுக்கான அனைத்துச் செலவுகளையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது சொந்த செலவில் செய்ததாகும்.

கடந்த அரசாங்க காலத்தில் அலரி மாளிகையில் தினந்தோறும் கூட்டங்கள் இடம்பெற்றதோடு அக்கூட்டங்களில் கலந்து கொள்வோருக்கு உணவு வழங்கப்பட்டதுடன் அனைத்துச் லெவுகளும் அரசாங்க பணத்தில் செய்யப்பட்டது. இவ்வாறு அதிகளவு மக்கள் பணம் கடந்த அரசாங்க காலத்தில் வீண்விரயம் செய்யப்பட்ட நிலையில் புதிய அரசின் பிரதமர் தனது சொந்த செலவில் இவ்வாறு கட்சி அமைப்பாளர்களுக்கு விருந்த வழங்கியமை மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

Disqus Comments