அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று வெள்ளிக்கிழமை அல்லது
நாளை சனிக்கிழமை பாரளுமன்றம் கூடும் போது சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் தெரிவித்தது.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்க்கட்சி எம்.பிக்களின் கையொப்பங்கள் திரட்டும்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதோடு நேற்று மாலை வரை 48 எம்.பிகள் அதில்
கையொப்பமிட்டிருந்ததாக அறிவிக்கப் படுகிறது.
கடந்த வாரம் வத்தளை பிரதேச சபை நடவடிக்கையின் போது பிரதேச சைபைத் தலைவர் சிலரினால் தாக்கப்பட்டமை மற்றும் அண்மைக் கால சம்பவங்கள் தொடர்பில் அமைச்சர் ஜோன் அமரதுங்க
வுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர தீர்மானித் துள்ளதாக எதிர்க்கட்சி
தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தார்.
ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தலைமையிலான குழு நம்பிக்கையில்லா
பிரேரணைக்கான கையொப்பங்களை திரட்டி வருவதாக எதிர்க்கட்சி அலுவலகம் கூறியது.
