Sunday, February 8, 2015

அரிசி விலையைக் குறைக்க முடியாதது ஏன்: விமல் வீரவன்ச கேள்வி

புதிய அரசாங்கம் கவர்ச்சிகரமான நிவாரணங்களை வழங்குவதாகக் கூறி மஞ்சள், கொத்தமல்லி போன்ற பாவனைப் பொருட்களுக்கு விலை குறைத்திருப்பினும் அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையை ஏன் குறைக்கவில்லை என கேள்வியெழுப்பியுள்ளார் விமல் வீரவன்ச.
நேற்றைய தினம் வரவு-செலவு திட்டத்தின் மீதான விவாதத்தின் போதே இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர், மிகவும் கவர்ச்சிகரமாக ‘வன் சொட்’ அடிப்படையில் பாரிய அளவில் வரிகளைத் திணித்து செல்வந்தர்களிடமிருந்து பெற்று இந்த வருடத்தை ஓட்டினாலும் அடுத்த வருடம் இந்த அரசாங்கம் என்ன செய்யப் போகிறது எனவும் கேள்வியெழுப்பியுள்ளதுடன் தற்போதைய ஆளுங்கட்சி கூட்டணி பொதுத் தேர்தல் வரையே நீடிக்கும் என்பதோடு பொதுத் தேர்தலில் எல்லோரும் தனித்தனியாகப் பிரிந்து நின்று போட்டியிடுவார்கள் அதன் பின் எவ்வாறு இந்த ஒற்றுமை நீடிக்கும் எனவும் கேள்வியெழுப்பி தற்போதைய வரவு செலவுத் திட்டமானது முழுக்கவும் தேர்தல் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments