
ஹொரனை அங்குறுவாதொட்டை வேரவத்தை பிரதேசத்தில் நேற்று பகல் காணாமல் போன ஒரு வயதும் 9 மாதமும் கொண்ட குழந்தையின் சடலத்தைக் கண்டெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனது வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள கங்கை ஒன்றிலிருந்து குழந்தையின் சடலம் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று பகல் தாயிடமிருந்து உணவு உட்கொண்டு கொண்டிருந்த இமேசா தெவ்மினி எனும் இக்குழந்தை தனது தாய் கை கழுவுவதற்காக வீட்டினுள் சென்றதன் பின்னர் திடீரெனக் காணாமல் போயிருந்துள்ளது. இவ்வாறு காணாமல் போன குழந்தையை தேடும் பணி நேற்று முழுதும் மேற்கொள்ளப்பட்டதோடு பொலிஸ் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.