Thursday, February 5, 2015

ராகமையில் இரயில் விபத்து. நால்வர் சம்பவ இடத்திலேயே பலி.

ராகமை பட்டுவத்தை பிரதேசத்தில் புகையிரதத்தில் கெப் ரக வாகனமொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று புதன்கிழமை பகல் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.


மாத்தறையிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த புகையிரத்திலேயே குறித்த கெப் வாகனம் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் காயங்களுக்குள்ளான மேலும் இருவர் ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Disqus Comments