142 பயணிகளுடன் பயணித்த எயார்பஸ் A320 விமானம் பிரான்ஸின் அல்ப்ஸ் மலை மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாசிலோனேட் மற்றும் டீனே ஆகிய பகுதிகளுக்கிடையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பிரான்ஸின் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் தவிர குறித்த விமானத்தில் 06 விமானப் பணியாளர்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானம் ஜேர்மன்விங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி விமானத்தில் பயணித்தவா்கள் குறித்த எந்த விதமான உத்தியோக அறிக்கைகளும் இன்னும் வெளியாக வில்லை என்பது குறி்ப்பிடத்தக்கது.