“அடையாளங்காணப்படாத 4000 காசநோயாளர்கள் நம்மிடையே- அடையாளங்காண்போம்- சிகிச்சையளிப்போம்- அனைவருக்கும் ஆரோக்கியம் வழங்குவோம்” எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச காசநோய் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது
1884 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி டொக்டர் ரொபட் கொவ் காசநோயை ஏற்படுத்தும் பக்டீரியாவை அடையாளங்கண்டதை நினைவுகூறும் வகையில் காசநோய் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் காசநோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 9 மில்லியன் பேர் காச நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையை ஆரம்பித்துள்ளதுடன் அவர்களில் 1.5 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்
இலங்கையில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 9500 பேர் காசநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக காசநோய் தடுப்பு தொடர்பான தேசிய திட்டம் தெரிவிக்கிறது.
எனினும் உலக சுகாதார தாபனத்தின் தகவலுக்கமைய இலங்கையில் 14,000 காசநோயாளர்கள் இருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காசநோயானது சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக்கூடிய தொற்றுநோய் என்பது குறிப்பிடத்தக்கது.