பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல புலமைப் பரிசில் புதிய அரசாங்கத்தால் 2500வரை குறைக்கப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் 4000 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட மஹாபொல புலமை பரிசில் புதிய அரசாங்கத்தால் 5000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும் அது செயற்படுத்தப்படவில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மஜித் இந்திக தெரிவித்தார்.
புலமை பரிசில் தொகை குறைக்கப்பட்டு பாரிய அநியாயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் முன்வைத்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் ஜூலை மாதத்தில் இருந்து மஹாபொல புலமை பரிசில் தொகை 5000 ரூபாவாக உயர்த்தப்படும் என்றும் மஹாபொல பெறாத ஏனைய மாணவர்களுக்கான கொடுப்பனவு ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.