அதில் 49 பேர் மரணமடைந்துள்ளனர் என்று தொழிற்சங்கங்களும் மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. மோடி ஆட்சியில் அதிகரித்து வரும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளை எதிர்த்து புதுதில்லியில் நாடாளுமன்ற வீதியில் நாடு முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகளும் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.
அப்போது ‘மோடி ஆட்சியின் 300 நாட்களில் 600 மதக்கலவரங்கள்’ என்ற பெயரில் 100 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: மோடி ஆட்சிக்கு வந்து 300 நாட்களில், இன்றைக்கு மார்ச் வரை 600 மதக்கலவரங்கள் நடத்தப்பட்டுள்ளன. இவை திட்டமிடப்பட்டு சிறுபான்மையினர் அதிகமாக இருக்கும் பகுதிகளில் நடத்தப்பட்டவையாகும். இந்த கலவரங்களில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 149 தாக்குதல்கள் கிறிஸ்துவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளன.
451 தாக்குதல்கள் முஸ்லிம்களின் மீது நடத்தப்பட்டவையாகும். ஆனால், கிறிஸ்தவ அமைப்புகள் 168 வன்முறைகள் நிகழ்ந்துள்ளதாக ஆவணப்படுத்தியுள்ளன. இதில் சத்தீஸ்கரில்தான் அதிகபட்சமாக 28 சம்பவங்கள் நடந்துள்ளன. இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் 26ம் உத்தரப்பிரதேசத்தில் 18ம் தெலுங்கானாவில் 15ம் நடத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் மேற்கு வங்கத்தில் 73 வயது இறைப்பணி செவிலியர் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடூரம் ஒரு திட்டமிட்ட சிறுபான்மையினர் மீதான வன்முறையின் ஒரு பகுதியாகும்.
இது எங்குமே நடைபெறாத கொடூரம் ஆகும். நேரடியான கலவரங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் நீங்கலாக, ஜனநாயக அமைப்புகள் மீது எண்ணற்ற தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- CPIMChennaiSouth@facebook.com