Wednesday, March 25, 2015

புத்தளம் சிங்கள மொழி ஊடகவியலாளா் மீது தாக்குதல்

(எம்.எஸ்.முஸப்பிர்) புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரமொழி செய்தியாளர் ஒருவர் நேற்று மாலை தாக்குதலுக்கு உள்ளான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில், ஹிரான் பிரியங்கர ஜயசிங்க என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புத்தளம்- கொழும்பு வீதி, பாலாவி எனும் பிரதேசத்தில், காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குரிய காணி ஒன்றில், சிலர் அத்துமீறி நுழைந்து கம்பி வேலி அமைத்துள்ளனர். இதனையறிந்த புகைப்படமெடுக்கச் சென்றபோது மேற்படி குழுவினர் செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன் தாக்குதலையும் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

இக்காணியை தம்வசப்படுத்திக் கொள்வதற்காக கம்பி வேலி அமைக்கப்பட்டதாக தெரியவருகின்றது. செய்தி சேகரித்துகொண்டிருந்த போது, சிலர் தன்னை கீழே வீழ்த்தி தாக்கியதாகவும் தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பறித்தெடுத்து கொண்டதாகவும் கடும் முயற்சியினால் புகைப்படக் கருவிகளைப் பாதுகாத்துகொண்டதாகவும் பாதிக்கப்பட்ட செய்தியாளர் தெரிவித்தார். 

இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, செய்தியாளரை தாக்கியவரை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஊடகவியலாளர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Thanks to Tamilmirror.lk
Disqus Comments