Monday, March 30, 2015

முல்லைத்தீவு மாவட்ட தமிழ், முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைக்கு பிரதமா் நடவடிக்கை


(Cader Munawwer) முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்,தமிழ் மக்களது காணிப் பிரச்சினைகள் தொடர்பில் துரித தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறும் முஸ்லிம்களது காணிகளை விடுவித்து கொடுக்கும் வகையில் ஒரு வாரகாலத்துக்குள் விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்றினை சமர்ப்பிக்குமாறும்,துரித கதியில் முஸ்லிம்களது மீள்குடிற்றத்தை நிறைவு செய்யும் வகையில் முல்லை மாவட்ட முஸ்லிம்களது மீள்குடியேற்றம் தொடர்பிலான அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமி நாதனுக்கு பிரதமர் ரணில் விகரமசிங்க பணிப்புரை வழங்கினார்.


முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றுக் கிழமை வருகைத்தந்தார் .யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டயீட்டுக் கொடுப்பனவுகளை வழங்கி வைத்ததன் பின்னர் அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இடம் பெற்றது.

கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், பிரதமரிடத்தில் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய பிரதமர் மேற்கண்ட பணிப்புரையினை வழங்கினார்.

மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமி நாதன்,பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,செல்வம் அடைக்கலநாதன்,சிவசக்தி ஆனந்தன்,வடமாகாண ஆளுநர் மற்றும் உறுப்பினர் ஜனூபர் உட்பட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பணிமனையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரம சிங்க மேலும் பேசுகையில் கூறியதாவது.

யுத்த பாதிப்பினால் மன நோயுற்றவர்களுக்கு விசேட உளவள மருத்து ஆலோசனைகளை வழங்கும் வகையில் மொரீசியஸ்,தாய்லாந்து,இந்திய,மலேசிய நாடுகளிலிலுருந்து உளவள வைத்தியர்களை அழைப்பித்து இந்த சேவையினை இம்மக்களுக்கு வழங்கவும் இந்திய பிரதமருடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஊணமுற்றுள்ளவர்களுக்கான உதவிகள் உள்ளிட்ட பிரதேசத்தின் அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.மீனவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதாகவும்,1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தென்னிலங்கை மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடவருகைத்தந்திருந்தால் அவர்கள் தவிர அதற்கு பிற்பட்ட காலத்தில் தென்னிலங்கை மீனவர்கள் இங்கு வந்து நாயாறு பகுதியில் மீன் பிடித்தொழில் ஈடபட்டால் அவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்குமாறு பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதி பொலீஸ் மா அதிபரிடத்தில் பிரதமர் கேட்டுகொண்டார்.

உள்நாட்டு மீனவர்;களின் பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சரடன் பேசவுள்ளதாகவும்,தமிழக மீனவர்கள் அத்துமீறி வருவது தொடர்பி;ல் உரிய பொறிமுறையொன்று செயற்படுத்தப்படும்.அதே வேளை இழுவை படகுகள் தொழிலாளர்களின் கோறிக்கை தொடர்பிலும் உரிய நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததுடன்,சட்ட வரோத மீனவ வலைகளை கொண்டு மீன்பிடிப்பது தொடர்பில் கடற்றொழில் அதிகாரிகள் உரிய நடவடிக்கையினையnடுக்க வேண்டும் என்று அவர் இங்கு கூறினார். தேசிய பாடசாலைகள் கிளிநெnhச்சி ,யாழ்,உள்ளிட்ட வடக்கில் உள்ள தேசிய பாடசாலைகள் தொடர்பிலும்,பிரதேசத்தின் கல்வி சார் நடவடிக்கை தொடர்பிலும் அதிக கவனம் செலுத்துவதாகவும,ஆசிரிய நியமனங்களை பெறுகின்றவர்கள் 10 வருடங்கள் தாம் நியமனம் பெறும் பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்,இல்லாத விடத்து அது தொடர்பில் மாற்று நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்என்றும் இங்கு குறிப்பிட்டார்.

வன இலாக்கா மற்றும் இரானுவம் என்பன கையகப்படுத்தியுள்ள பொதுமக்களது காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஏற்கனவே மூவரடங்கிய குழவொன்று நியமிக்கப்பட்டுளள்ளதுடன்,மல்லை மக்களது இவ்hறான காணிகள் தொடர்பில் பொதுமக்களது முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதால் அது தொடர்பில் அறிக்கையினை சமர்ப்பிக்க நடவடிக்கையெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகள் மத்தியில் கூறினார்.

Disqus Comments