Saturday, March 28, 2015

கோடாரித் தாக்குதலுக்கு இலக்கான MY3யின் சகோதரா் பிரியந்த சிறிசேன மரணம்

தாக்குலுக்கு இலக்காகி பலத்த காயத்துக்குள்ளான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் பிரியந்த சிறிசேன உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை 3.50 அளவில் பிரியந்த சிறிசேன உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.
சடலம், குறித்த தனியார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரதே பரிசோதனைகளும் நீதாவான் விசாரணையும் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரியந்த சிறிசேன மீது நேற்று முந்தினம் பொலன்னறுவை பகுதியில் வைத்து கோடரியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த பிரியந்த சிறிசேன பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே, தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Disqus Comments