கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீன் உடனான சந்திப்பு ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் நடைபெற்றது இதில்,
2014 ஆம் ஆண்டு செனுவில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க வியாபார உடன்படிக்கைக்குப்பிறகு வர்த்தகத்தை 1பில்லியன் அமெரிக்க டொலர் வரை உயர்த்துவதற்கான முதலாவது சந்திப்பாகும் இதில்வியட்னாமுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கான சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளது என்பதனை தூதுக்குழு தெரிவித்தது.
வியட்னாமின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் கூறுகையில் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமான வர்த்த ஒப்பந்தங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூரினார்,அத்துடன் இலங்கை (Free Trade)சுதந்திர வர்த்தகம் ஊடாக வியட்னாமின் சந்தை வாய்ப்பை அதிகரிக்கலாம் என்று தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டை விட 2013 ஆம் ஆண்டு அதிகமான வர்த்த வீதம் உயர்ந்துள்ளது சுமார் 88% உயர்வாகும்.2014ஆம் ஆண்டு மேலும் 17% உயர்வடைந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தூதுக்குழுவிடம் தெரிவித்தார்.