நடைபெற்றுவரும் 11ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப்போட்டியில், தென்னாபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, முதல் முறையாக உலக்கிண்ண இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
ஓக்லண்ட மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(24) ஆரம்பமான அரையிறுதிப்போட்டியில் தென்னாபிரிக்கா -நியூசிலாந்து அணிகள் மோதின. நாணயசுழற்றிசியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி, முதலில் துடுப்பெடுத்தாடியது. போட்டியின் இடையில் மழை குறுக்கிட, 43 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் 5 விக்கெட்டுக்களை இழந்து 281 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா சார்பில் டு பிளசி 82 ஓட்டங்களையும் ஏ பி டி வில்லியர்ஸ் 65 ஓட்டங்களையும் டேவிட் மிலர் 49 ஓட்டங்களையும் (18 பந்துகளில்) பெற்றுக்கொண்டனர். அதனையடுத்து, 43 ஓவர்களில் 298 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 42.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி பெற்று முதல் முறையாக உலக்கிண்ண இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நியூசிலாந்து அணி சார்பாக, மார்ட்டின் கப்தில் 34, பிரன்டன் மெக்கலம் (அணித்தலைவர்;) 59, கனே வில்லியம்சன் 6, ரொஸ் டெய்லர் 30, கிரான்ட் எலியாட் 84, கோரி என்டர்சன் 58, லுக் ரோஞ்ச் 8 விக்டோரி 7 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.