Monday, March 30, 2015

புத்தளம் புழுதிவயல் வைத்தியசாலையின் குறைபாடுகளை நல்லாற்சியாளர்கள் கவனிப்பார்களா?

புத்தளம் புழுதிவயல் கிராமத்திலுல்ல மத்திய மருந்தகம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் இருபது வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னும் அடிப்படை வசதிகள் பூர்த்திசெய்யப்படாமல் இருப்பது வேதனையளிக்கின்றது.

1992ம் ஆண்டு ஊர் மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக அப்போதைய சுகாதார அமைச்சர் ரேனுகா ஹேரத் அவர்களின் நிதியொதுக்கீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட இவ்வைத்தியசாலை 1994ம் ஆண்டு கௌரவ சுகாதார அமைச்சர் பௌசி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரு தசாப்தங்களை தாண்டிய நிலையிலும் தரமுயர்த்தப்படாமல் அடிப்படை வசதிகளற்று காணப்படுவது இப்பிரதேச மக்களுக்குச் செய்யும் பாரிய அநீதியாகும். 

தினமும் புளுதிவயல், விருதோடை, ரெட்பானா, சேனைகுடியிருப்பு, மஞ்சாடிசோலை, வெட்டுக்காடு, பனையடிசோலை, தேத்தாபளை, உளுக்காபள்ளம், நாயகர்சேனை, கரம்பை, பாலசோலை போன்ற பிரதேசங்களை சேர்ந்த நூற்றுக்கனக்கான மூவின மக்களும் பயன்படுத்தும் இவ்வைத்தியசாலையை தரமுயர்த்தி முழுநேர வைத்தியசாலையாக மாற்றியமைப்பதன் மூலம் இப்பகுதி மக்கள் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்வார்கள். 

அதே நேரம் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே திறக்கப்படும் பல்வைத்திய சிகிச்சை நிலையத்தை நவீனவசதிகளுடன் கூடிய முழுநேர சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கு சுகாதார அமைச்சர் கௌரவ ஹசனலிக்கு அழுத்தங்களை கொடுக்க வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் முக்கியஸ்தர் பைரூஸ் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். UNP+SLMC கோட்டையென வர்ணிக்கப்படும் இப்பிரதேச மக்களை வெறும் வாக்களிக்கும் இயந்திரங்களாக பயன்படுத்தாமல் அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையல்லவா???

Thanks to puluthivayal.com FB PAGE
Disqus Comments