அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட இலவச வைபை (WIFI) வசதிகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வுகள் கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்தில் இன்று நடைபெறவுள்ளன.
இதன்படி இன்று முதல் 26 பொது இடங்களில் வைபை (WIFI) இணையத் தொடர்பு வசதிகளை பெறமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.