போலி ஆவணங்களை சமர்பித்து கட்டார் நாட்டுக்கு தொழில் புரிய செல்லவென பயிற்சிபெற்ற 17 வயது யுவதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜா-எல துடெல்ல பகுதி பயிற்சி நிலையத்தில் வைத்து குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
யுவதி கிண்ணியா - புவஸ்திபுர பகுதியைச் சேர்ந்தவர் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று (10) நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட யுவதி குற்றத்தை ஒப்புக் கொண்டதால் 10,000 ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.