தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
5 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 45 வயது தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனக்கு நடந்த கொடுமை குறித்து சிறுமி தனது தாயிடம் (29 வயது) கூறியதை அடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி தங்கொட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் கடுமையான வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் மாரவில நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.