Wednesday, April 1, 2015

முகத்தை மறைக்கும் தலைக்கவச தடுப்புச் சட்டம் மீண்டும் மே 2ம் திகதி வரை ஒத்திவைப்பு

முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் தலைக்கவசம் அணியும் சட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து அந்த தடைச்சட்டத்தை எதிர்வரும் மே மாதம் முதல் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இந்த சட்டம் கடந்த மார்ச் 21ஆம் திகதி அமுல்படுத்தப்படவிருந்த நிலையில், பொதுமக்கள் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால், பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய அத்திட்டத்தை அமுல்படுத்துவது நிறுத்தி  வைக்கப்பட்டிருந்தது. 

பின்னர் இந்த சட்டம் நாளை 02ஆம் திகதி முதல் அமுல்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் இது மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
Disqus Comments