(NEWS FIRST TAMIL) பூகோள தினம் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22 ஆம் திகதி புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.
“சூழலை பாதுகாப்பதற்காக ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில் இந்த வருடம் உலக பூகோள தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
சூழல் மாசடைவதை தவிர்ப்பது தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்துவதே பூகோள தினம் அனுஷ்டிப்படுவதன் முக்கிய நோக்கம் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மஸ்ரீ தெரிவிக்கின்றார்.
அதற்கமைய, நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று (22) முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவிக்கின்றது.