Wednesday, April 22, 2015

வடமேல் மாகாண சபையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டம்.

(புத்தளம் ஆன்லைன்) வட மேல் மாகாண சபையிலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.

மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர மற்றும் அரசாங்க அமைச்சர்கள் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தினால் சபையில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. சபையின் ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதே பதற்ற நிலை உருவாகியுள்ளது.
அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னெடுக்கும் மோஷமான நடவடிக்கைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததாக அம்மாகாண சபையின் முதலமைச்சர் தயாசிரி  ஜயசேகர ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளார்.



Disqus Comments