Saturday, April 4, 2015

இலங்கை வாழ் மக்கள் இன்று சந்திர கிரணகனத்தை பார்க்க முடியும்.

இலங்கையில் வாழ்கின்றவர்கள், இன்று சனிக்கிழமை(04) அரை சந்திர கிரகணத்தை பார்க்க முடியும் என்று நவீன தொழில்நுட்பம் தொடர்பிலான ஆர்தர் சி கிளார்க் மத்தியநிலையம் அறிவித்துள்ளது.

மாலை 5 மணிக்கே அரை சந்திர கிரகணம் தென்படும் என்றும் அந்த மத்தியநிலையம் அறிவித்துள்ளது. எனினும், சந்திர கிரகணத்தின் இறுதி இரவு 8 மணிவரையும் தென்படும் என்றும் அறிவித்துள்ளது.

சந்திரன் நாளை மாலை 4.46க்கு உதிக்கும். அப்போதிருந்து இரவு 8 மணிவரையும் அரை சந்திரக்கிரகணம் தென்படும்.

இந்த அரை சந்திரக்கிரகணம், வடஅமெரிக்கா, பசுப்பிக் சமுத்திரம் ஊடாக சீனா வரையிலும் முழு சந்திரக்கிரகணமாக தென்படும் என்றும் அந்த நிலையம் அறிவித்துள்ளது.
Disqus Comments