Thursday, April 2, 2015

தாயின் இரண்டாவது கணவர் மகளை வல்லுறவு செய்த கொடுமை!


(ADADERANA TAMIL) 16 வயது சிறுமியை ஐந்து வருடங்களாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாகக் கூறப்படும் 48 வயதான நபர் ஒருவர் ஆராச்சிகட்டு - வைரன்கட்டு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். 


119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து சிலாபம் பொலிஸ் நிலைய மகளிர் சிறுவர் பிரிவு அதிகாரிகள் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். 



பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உயிரிழந்த பின் தாயினால் இரண்டாவது திருமணம் முடிக்கப்பட்ட நபரே இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. 



2010ம் ஆண்டு தொடக்கம் இந்த சம்பவம் இடம்பெற்று வருவதாகவும் தாய், வீட்டில் இல்லாத சமயத்தில் தனக்கு இந்த கதி நேர்ந்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 



சிறுமி வைத்திய பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
Disqus Comments