சிறுவர்களிடத்தில் பணக் கொடுக்கல் வாங்கல் விடயங்களை பழக்கப்படுத்திக் கொள்ளும் நோக்கில் புத்தளம் மதுரங்குளிய ரெட்பானா பாலா் பாடசாலையில் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று பிற்பகல் இடம்பெற்றது.
பாடசாலை ஆசிரியைகளான S.S. சமீரா மற்றும் MF. மஹீஸா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் அதிதிகளாக ரெட்பானா ஜும்ஆ மஸ்ஜித் நிா்வாகத்தினா் கலந்துகொண்டனர். இச்சிறுவர் சந்தையில் பாடசாலை மாணவர்களது ஏராளமான விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.