ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரி 15 ரூபாவாலும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரி 20 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, 40 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரி 55 ரூபாவாகவும் 10 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரி 30 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.