Wednesday, April 29, 2015

தங்கை மீது பாலியல் வல்லுறவு புரிந்த அண்ணன் கைது! - காக்கைப்பள்ளியில் சம்பவம்.

9 வயதுடைய தனது தங்கையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 17 வயதுடைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். 


சிலாபம் - காக்கைப்பள்ளி, சியம்பலாகஸ்வெல பகுதியில் வசிக்கும் 4ம் தர மாணவியே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 



குறித்த சிறுமியின் தான் வெளிநாட்டில் வேலைக்குச் சென்றுள்ள நிலையில் சிறுமி தந்தையில் பாதுகாவலில் வளர்ந்து வந்துள்ளார். 



கடந்த ஜனவரி மாதம் வீட்டில் தந்தை இல்லாதபோது சகோதரர் தனது தங்கை மீது வல்லுறவு புரிந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவருகிறது. 



தாய் நாடு திரும்பியவுடன் சிறுமி தனக்கு நேர்ந்ததை தெரிவித்ததை அடுத்து மாதம்மே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 



அதன்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி வைத்திய பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 



சந்தேகநபர் சிலாம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார். 



(அத தெரண தமிழ்)
Disqus Comments