Tuesday, April 28, 2015

நவீனமயப்படுத்தபட வேண்டிய கட்டாரில் உள்ள இலங்கைத் தூதரகம்.

(முகநூலில் இருந்து பிரதி பன்னப்பட்டது.) கட்டார் 2014ம் ஆண்டு உலகிலேயே செல்வம் கொட்டிக் கொழிக்கும் நாடாக தோ்வு செய்யப்பட்டது. தனிநபா் வருமானத்தில் கட்டாரிகள் ஏனைய உலக நாடுகளும் ஒப்பிடுவகையில் அதிக வருமானம் பெற்றுக் கொள்வதாக சொல்லப்பட்டது. 

ஆனால் கட்டார் வாழ் மக்கள் 2.5-3 இலட்சம் தான் ஆனால் வெளிநாட்டுக் காரா்கள் கட்டாரிகளை விட 10 மடங்கு அதிகமாக இருக்கின்றார்கள் என்பது தான் உண்மை.


அந்தத்த நாடுகள் கட்டாரில் கட்டாரில் இருக்கும் தனது நாட்டவா்களின் நலனுக்காக தூதுவா் ஆலயங்களை திறந்து வைத்து தங்களது நாட்டவா்களை பராமரிக்கின்றன.

அந்த வகையில் எமது இலங்கைத் திருநாட்டின் தூதுவா் ஆலயத்திற்கு எனது சான்றிதழ் ஒன்றை செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது.

நான் அங்கு கண்ட குறைபாடுகளை நண்பா்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகின்றேன்.
நான் கண்ட குறைபாடுகள்.
1. கட்டிட நிர்மாணத்துறையில் முன்னனில் இருக்கும் கட்டார் போன்ற பணக்கார நாட்டில் இலங்கை தூதுவராலயம் பழைய ஒதுக்குப்புறமான ஒரு கட்டத்தில் காணப்படுகின்றது.

2. சுமார் ஒரு இலட்சம் இலங்கையா்கள் தொழில் நிமித்தம் வசிக்கும் கட்டார் நாட்டில், தினமும் ஆயிரக் கணக்கான தொழிலாளா்கள் தங்களது தேவை நிமித்தம் வரும் தூதரகத்தின் வரவேற்று அறையில் 12 போ் மட்டுமே அமா்வதற்கான இருக்கைகள் வைக்கப்பட்டுமை கவலைக்குரியது. நூற்றுக்கு மேற்பட்ட நபா்கள் நின்ற நிலையில் இருப்பதை அவதானிக்க முடிந்தது.

3. வங்கி அட்டைகள் மூலம் சம்பளம் செலுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் கட்டாரில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் CASH PAYMENT மட்டும் தான் ஏற்றுக் கொள்ளபடும் என்ற கட்டாய நிலை தவிர்க்கப்படவேண்டும்.

4. இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் மட்டும் கட்டாரில் இல்லை. சிங்களம் மற்றும் தமிழை தாய்மொழியாக கொண்ட மக்கள் இருக்கின்றார்கள். ஆகவே அங்கு பணி புரியக் கூடியவா்கள் குறைந்தது சிங்களம், மற்றும் தமிழ் மொழிகளில் சரளமாக பேசக் கூடியவா்களாக இருந்தால் சிங்களம் தெரியாதவா்கள் கூட தங்களது வேலைகளை இலகுவாக செய்ய கூடியதாக இருக்கும்.

5. TOKEN வழங்கப்படுவதும், குறித்த நபா் அழைக்கப்படுவதும் குரல் வழியாக அமைந்துள்ளது. அதனை விட கட்டாரின் அரச காரியங்களால் போல் Token Number Display - Queue Management System போன்றவை பயன்படுத்தப்பட்டால் தூவராலயத்தில் அமைதியான சூழலைப் பேண முடிவதோடு மக்கள் முந்தியடித்துக் கொண்டு செல்வதை தடுக்க முடியும்.

6. தமது தேவைக்காக வரும் அனைவரும் அனைத்து உபகரணங்களையும் எடுத்து வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே பேனை, பசை, மற்றும் முக்கியமாக போட்டோக் கொப்பி வசதிகள் ஏற்படுத்தி வைக்கப்படல் வேண்டும்.

7. தாமதமான சேவை. குறிப்பாக கடவுச்சீட்டு புதுப்பித்தல் போன்ற முக்கியமான விடயடங்கள் மாதக் கணக்கில் எடுத்தலானது மிக்க கவலைக்குரிய விடயமாகும். அயல் நாட்டு தூதுவராலயங்களில் ஒரு சில மணிநேரங்களில் புதிய கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ளும் வசதி காணப்படும் போது எமது தூதுவராலயத்தில் இப்படி மந்த கதியில் சேவை வழங்கப்படுவது கவலைக்குறியது.

வேலை நிமித்தம் தூதரகம் செல்வோர் கவனத்திற்கு…..!
***************************************************************************
1. தூதரகத்தின் உட்பகுதியில் தொலைபேசி பாவனை தடைசெய்யப்பட்டுள்ளது. ஆகவே இதனை கருத்தில் கொண்டு தொலை பேசி பாவனைனை தடைசெய்து அதிகாரிகள் தங்களது வேலையை சரிவர செய்ய அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துங்கள்.

2. என்னதான் நீங்கள் cardகள் வைத்திருந்தாலும் கைகளில் Cash ஐ கொண்டு செல்லுங்கள்.
3. ஆவனங்களை உறுதிப்படுத்தக் கொண்டு செல்பவா்கள் என்ன ஆவனமாக இருந்தாலும் பிரதிகளை எடுத்துச் செல்லுங்கள்.
4. தங்களது நண்பா்கள், உறவினா்கள் போன்றோரைக் காணும் போது தூதரகத்தின் உட்பகுதியில் நட்பு கொண்டாடாமல் அமைதியான சூழலைப் பேண உதவுங்கள்.
5. பட்டப்படிப்பு, மற்றும் ஏனைய முக்கியமான சான்றிதழ்களை வைத்திருப்பவா்கள் கட்டாருக்கு வருமுன் அனைத்து சான்றிதழ்களையும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சில் உறுப்படுத்திக் கொண்டு வருவது மிகக் கட்டாயமானது. அவ்வாறு உறுதிப்படுத்தாமல் இருந்தால் கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்தால் உறுதிப்படுத்தமாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
6. எழுத்தறிவு குறைந்த அல்லது அலுவலக விடயங்களில் முன்அனுபவம் இல்லாதவா்கள் தங்கள்து தேவைகளுக்கு அனுபவம் வாய்ந்த அன்பா்களை அழைத்துச் செல்வது மிகவும் ஏற்றமானது.

இந்தப்பதிவு உங்களுக்கு பிரயோசனம் என்றால் LIKE செய்யுங்கள். மற்றவா்களுக்கு பிரயோசமாக இருக்கும் என்றால் SHARE செய்யுங்கள்.



நன்றி.
Disqus Comments