கோவா: பெண்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்த விவகாரத்தில், பிரபல துணிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கோவாவில் பிரபல துணிக்கடையான ஃபாப்இந்தியா என்ற கடைக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சென்றார். அங்கு , சில ஆடைகளை தேர்வுச் செய்து, அவற்றின் அளவை சரிபார்க்க பெண்கள் உடைமாற்றும் அறைக்கு சென்றார்.
அங்கு ரகசிய கேமரா ஒன்று வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து தமது கணவர் ஜூபின் இரானி மற்றும் உள்ளூர் எம்எல்ஏ மைக்கேல் லோபோவிடம் தகவல் அளித்தார்.
மேலும் காவல்துறையினருக்கும் புகார் அளிக்கப்பட்டது. பின்பு கடைக்கு வந்த காவல்துறையினர் கடைக்கு சீல் வைத்ததோடு, கடையில் பணிபுரிந்த 4 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே கைதான நால்வருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.