புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் கீரியங்கள்ளி பிரதேசத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த முஸ்லிம்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்கவிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும், புத்தளத்திலிருந்து சிலாபம் நோக்கிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
லொறியின் சாரதியை கைதுசெய்துள்ள முந்தல் பொலிஸார், மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் விபரம் பெண் 50 வயது , அவரின் மகன் 30 வயது, மற்றும் மகளின் பிள்ளைகள் இருவர் சுமார் 2 வயது. அதேவேளை மகள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.