Tuesday, May 5, 2015

அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் இம் மாதம் 15 ஆம் திகதி கலைப்பு

அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் எதிர்வரும் 15 ஆம் திகதி கலைப்பாடவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

271 பிரதேச சபைகள்
41 நகர சபைகள்
23 மாநகர சபைகளைக் கொண்ட 

உள்ளூராட்சி சபையில் பெரும்பாலனவற்றின் ஆட்சிக் காலம் கடந்த ஒக்ரோபர் மாதத்துடன் முடிந்து விட்டது. 

இவற்றுக்கான தேர்தல் உள்ளூராட்சி சபை சட்டத்தைப் பயன்படுத்தி பிற்போடப்பட்ட நிலையில் எதிர் வரும் 15 ஆம் திகதி உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் கலைக்கப்பட்டு தொகுதி வாரி தேர்தல் முறை மூலம் தேர்தல் நடக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Disqus Comments