எதிர் வரும் பொது தேர்தலில் பொது பல சேனா தனது அமைப்பின் கீழ் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கி தேர்தலில் போட்டியிட போவதாக அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலாந்தவிதானகே தெரிவித்தார்.
கிருலப்பனை பொது பல சேனா அமைப்பின் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், பொது பல சேனா அமைப்பபு உருவாக்கப்பட்டு 3 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. 3 வருடங்களில் நாட்டின் சிங்கள மக்களை விழிப்படையச் செய்யும் எமது கொள்கையில் வெற்றி கண்டுள்ளளோம.
எனினும் பாராளுமன்றத்தில் சிங்களவர் உரிமை பற்றியும் அவற்றை பாதுகாப்பது தொடர்பிலும் பேசுவதற்கான ஒரு தலைவர் கூட இல்லாதிருப்பது வருத்தமளிக்கிறது. அதனை கருத்திற் கொண்டு எதிர்வரும் தேர்தலில் பொது பலசேனா அமைப்பின் கீழ் புதிய கட்சியொன்றை களமிறக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
அதன்படி எமது கட்சி நாட்டில் இன்று பறக்கணிக்கப் படும் சிங்கள மக்களின் அரசியல் உரிமைகள்,சமூகமற்றும் சமய உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சியாக செயற்படும். வேறு கட்சிகளுடன் ஒன்றினைந்து செயற்படும் எண்ணமும் எமக்கு இல்லை. இணைந்து செய்ற்பட வேண்டிய கட்டாய நிலையொன்று ஏற்பட்டால் அதற்கும் தயாராவுள்ளோம்.
அதேவேளை பொதுபல சேனா அமைப்பு முன்னால் ஜனாதிபதி மஹிந்தவுக்கு உதவி செய்த காரணத்தால் மக்களிடையே இருந்த நன்மதிப்பை இழந்துள்ளது. அவ்வாறு மக்களிடம் இழந்த நன்மதிப்பை மீண்டும் பெறுவதற்கு அரசியல் பிரவேசம் உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்த்துள்ளோம். இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் ஆலோசிக்க தீர்மானிக்க பட்டுள்ளது என்றார்.