Wednesday, May 13, 2015

பாகிஸ்தான் துப்பாக்கிப் பிரயோகத்தில் 41 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ள துப்பாக்கிப் பிரயோகத்தில் சுமார் 41 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர் என்று அந்த நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இஸ்மைலி ஷியா முஸ்லிம்களை பஸ் வண்டியொன்று  ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது, கராச்சி நகரில் அப்பஸ் வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களில்; வந்த சுமார் 06 துப்பாக்கிதாரிகள், மேற்படி பஸ் வண்டியை இடைநிறுத்தி, பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதன்போது, ஆண்களும் பெண்களுமாக  41 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்த நாட்டுப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கு இதுவரையில் எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை என்றும் அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Disqus Comments