இன்று மிக வேகமாக பிரபலமாகி அனைவராலும் பாவிக்கப்பட்டு வரும் அப்ளிகேஷன் தான் டப்ஸ்மேஷ் (Dubsmash). இது ஆன்டிராய்டு PLAY STORE இல் பிரபலமான அப்ளிகேஷன்களில் 7வது இடத்தினை தனதாக்கிக் கொண்டுள்ளது.
ஆன்டிராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) இயங்குதளங்களில் கிடைக்கும் இந்த அப்ளிகேஷன் பொழுதுபோக்கிற்காக Mobile Motion எனும் மென்பொருள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்றைய இளைஞர்களின் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் இந்த மென்பொருள் பல விதங்களில் அதன் பயனாளிகளிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சைபர்வார்சோன் எனும் பிரபல இணையதளத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நவம்பர் 27, 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த அப்ளிகேஷன் 500.000+ முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 32 எம்பி அளவு கொண்ட இந்த அப்ளிகேஷன் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை அவர்களின் அனுமதியின்றி இலகுவாக பயன்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.