இன்றைய தொழில்நுட்ப உலகில் இன்டர்நெட் இல்லாமல் எதுவும் சாத்தியம் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. மேலும் மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகவே இன்டர்நெட் உள்ளது என்று சொல்வதிலும் ஆச்சரியம் இல்லை. அந்த அளவு இன்டர்நெட்டின் தேவையும் சேவையும் அதிகரித்துள்ளது.
இங்கு இன்டர்நெட் பற்றிய சில குறிப்பினை பார்போம்.
- இன்டர்நெட்இன் தந்தையாக ஜே.சி.ஆர்.லிக்லைடர் (J.C.R. Licklider) அறியப்படுகிறார்.
- முதலாவது TCP/IP முறையிலமைந்த வலையமைப்பானது ஐக்கிய அமெரிக்காவின் நேஷனல் சயன்ஸ் பவுண்டேசனில் ஜனவரி 1, 1983 முதல் இயங்க ஆரம்பித்தது.
- பிரான்ஸ் ஸ்விட்சலாந்து எல்லையிலிருந்த சேர்னோபிலில் உலகளாவிய வலை பிரசித்தமடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டிம் பேர்ணர்ஸ்-லீ (Tim Berners-Lee) என்பவரால் HTML, HTTP என்னும் அனுமதிக்கப் பட்ட அணுகுமுறைகளை கொண்ட புதிய அணுஆய்வுகளுக்கான ஐரோப்பிய அமைப்பின் (CERN) இணையத் தளமானது உருவாக்கப் பட்டது.
- ஜூன் 30 2006-ல் உலகம் முழுவதும் நூறு கோடி மக்களுக்கும் மேல் இணையத்தை உபயோகம் செய்கிறார்கள்.
- ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 4200 புதிய டோமைன் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன, ஆண்டிற்கு இதன் எண்ணிக்கை 37 மில்லியனாக இருக்கின்றது.
- 2010 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் இன்டர்நெட்டின் மொத்த அளவு 6 மில்லியன் டெராபைட்களாக இருக்கும் என எதிர்பார்த்தது.
- தற்சமயம் 637 மில்லியன் வெப்சைட்களும், 250 மில்லியன் ப்ளாகுகளும் பயன்பாட்டில் இருக்கின்றன.
- பேஸ்புக் தளம் 1.2 பில்லியனாக தற்சமயம் இருக்கின்றது, உலக சனத்தொகையில் 17% மக்கள் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர்.
- இன்டர்நெட் பயன்படுத்தும் 2.4 பில்லியன் பயனாளிகளில் 50 சதவீதத்தினர் பேஸ்புக் தளத்தினை மட்டும் தான் பயன்படுத்துகின்றனர்.
- உலகின் முதல் மின்னஞ்சல் 1971 ஆம் ஆண்டு ரே டாமிலின்ஸன் என்பவரால் அனுப்பப்பட்டது.
- தினமும் 250 பில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன, இதில் 81 சதவீத மின்னஞ்சல் ஸ்பேம் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலகின் முதல் ட்வீட்டினை அதன் நிறுவனர் ஜாக் டார்சீ 2006 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி மேற்கொண்டார், இன்று தினமும் 1,700 டுவீட்கள் ஒவ்வொரு நொடியிலும் மேற்கொள்ளப்படுகின்றது.
- ஒவ்வொரு மாதமும் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் யூட்யூபில் வீடியோக்களை பார்த்து வருகின்றனர்.