பஸ்களுக்கான ஆசன ஒதுக்கீடுகளை தொலைப்பேசியூடாக முற்பதிவு செய்து கொள்வதற்கான நடைமுறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச்சபை தெரிவித்துள்ளது.
நீண்டதூர சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளில் பயணிப்பதற்கான ஆசனப்பதிவை தொலைபேசியூடாக முன்கூட்டியே மேற்கொள்ளமுடியும் என போக்குவரத்துத் தொடர்பான பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக தெரிவித்தார்.
தற்போது மத்திய பஸ் நிலையத்திற்கு சென்று ஆசனங்களை பதிவு செய்யும் நடவடிக்கை காணப்படுவதாகவும் , இதன் காரணமாக பயணிகள் முகங்கொடுக்கும் சிரமங்களை தவிர்ப்பதற்கு ஏற்றவகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய யாழ்ப்பாணம், திருகோணமலை, கல்முனை , அம்பாறை போன்ற தூர பகுதிகளிக்கு பயணிப்போர் தொலைப்பேசியூடாக தமது ஆசனப் பதிவுகளை முன்கூட்டியே செய்து கொள்ள முடியும் எனவும் போக்குவரத்துத் தொடர்பான பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.