-செல்வநாயகம் கபிலன் பலாப்பழத்தின் சுளைச்சவ்வு தொண்டையில் சிக்கிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (03) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக பகுதியைச் சேர்ந்த எஸ்.தனுசன் (வயது 08) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 01ஆம் திகதி பலாப்பழம் உண்ட சிறுவன் சவ்வு சிக்கி மூச்சுத்திணறியதையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.