நேபாளத்தில் இடம்பெற்ற 7.4 ரிச்டர் நிலநடுக்கத்தால் அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் நிலநடுக்கத்தால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை என்றும் அவர்கள் முன்கூட்டியே அகற்றப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் 25ம் திகதி நேபாளத்தில் இடம்பெற்ற 7.8 ரிச்டர் அளவு நிலநடுக்கத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று நேபாளத்தின் மேற்கு பகுதி சீனாவின் எல்லையில் நிலத்துக்கு அடியில் 18.5 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஒன்று பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
(அத தெரண - தமிழ்)