Tuesday, May 12, 2015

சக்தி ஊடக வலையமைப்பிற்கு இலங்கை முஸ்லிம் சார்பாக ஒரு வேண்டுகோள்.

*Athambawa Waaqir Hussain-* ||| இலங்கையில் உள்ள சிறு பான்மை மக்களிடையே மிகவும் பிரபலியமாய் விளங்கும் தொலைகாட்சி செய்தி ஊடகம் என்றால் , அது சக்தி வலையமைப்பு என்பது நாம் எல்லோரும் அறிந்ததே, ஆனால் இந்த சக்தி செய்தி வலையமைப்பு , நடுநிலை பேணல் என்ற உன்னதமான விடையத்தை தனது செய்திகளில் கடைப்பிடிக்கின்றது என்றால் , நிச்சயம் அந்த நடுநிலைமை என்ற பதம் அவர்களின் செய்திகளில் , அதல பாதாளத்தை நோக்கி சென்றிருப்பதை நாம் கண்கூடாக காண முடியும் .

ஒரு பொறுப்புவாய்ந்த ஊடகமாக செயற்படவேண்டிய இவ்வூடகம், ஏதோ , பழி வாங்கும் மனநிலையில் செய்திகளை , எந்தவித ஆதாரமும் இன்றி தொகுத்து வழங்குவது மிகவும் கேவலத்துடன் கூடியவரம்பு மீறலாகும்.

காடுகளை காப்பாற்ற போகின்றோம் என்ற தொனியில், தாம் பட்ட காயத்துக்கு மருந்து தடவும் ஒருஈனத்தனமான திட்டமிடப்பட்ட பொய்யான இட்டுககட்டல்களை அவிழ்த்து விடுவதன் மூலம், தாமும் ஒரு மூன்றாம் நிலைக்கு கீழ் உள்ள ஒரு சாதாரண செய்தி ஊடகம் என்ற உண்மையை உலகின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துவிட்டனர் அவர்கள்.

பொது மக்களின் , அடிப்படை உரிமை மீறல்களுடன் தொடர்புபட்ட செய்திகளை , எந்தவித தேடலும் இன்றி , ஆதாரங்களும் இன்றி , வில்பத்து காடுகளில் வாழும் ஐந்தறிவு விலங்குகள் போல ,முன்னுக்குப்பின் முரணாக , முகங்களை மறைத்து, சேலை கட்டிய கோழைகளைப்போல தொகுத்து வழங்கியதன் மூலம், தமக்கும், இதற்கு முன் இலங்கையில் இருந்த பேரினவாத குழுக்களுக்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லை என்று பறை சாற்றி சென்றுவிட்டது சக்தியின் நியூஸ் பர்ஸ்ட் குழுமம்.

ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவருடனான மோதல் போக்கில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இடம்பெயர்ந்து வாழும் அப்பாவி மக்களின் , மீள் குடியேற்றம் என்ற அடிப்படை உரிமையில் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்திகள் வெளியிடும் சக்தி செய்தி வலையமைப்பு மிகவும் அசிங்கமான முறையில் கலங்கப்பட்டுள்ளது என்பதே யதார்த்தம்.

ஊடக சுதந்திரம் என்பது , நியாயமான முறையில் , மிகவும் உணர்வுபூர்வமான வகையில், தீர விசாரிப்பதன் மூலம் வெளிக்கொணரப்படும் செய்திகளே என்பது எழுதப்படாத விதி என்றாலும், அதில் ஆகக்குறைந்தது, தீர விசாரிப்பை கூட செய்யாமல், சிலரின் முகங்களை மூடி,உண்மைக்கு புறம்பாக , ஒரு சமூகத்தின் உரிமையை கொச்சைப்படுத்துவது , நிச்சயம் ஊடக விபச்சாரம் என்பதை நான் இங்கு எந்தவித ஒளிவு மறைவுமின்றி தெரிவிப்பதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.

பழிவாங்கல் என்ற தனிப்பட்ட ஒரு திட்டமிட்ட செயலினால் , நீங்கள் தெரிவுக்கும் செய்திகள் மக்கள் மனதில் நஞ்சை விதைக்கும் என்றால், இன்ஷா அல்லாஹ் , அந்த பழிவாங்கள் கூட ஒரு வட்டமாய் மாறி , என்றோ ஒருநாள் நிச்சயம் உங்களையும் பழிவாங்கும் என்பதை மட்டும் நினைவில் நிறுத்தவும்.
Disqus Comments