(KAB) "புத்தெழில்" மாதாந்த பத்திரிகையின் பத்து வருட பூர்த்தியை முன்னிட்டு, இலவச வெளியீடும், வைபவமும் 09.05.2015 அன்று சாஹிரா கல்லூரி கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
பத்திரிகையின் பிரதம ஆசிரியர் Z.A.M. நமாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரமுகர்களும், "புத்தெழிலுக்கு" தொடராக பங்களிப்பு செய்தவர்களும் கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக 'ஊடகங்களின் ஊடாக ஊடகவியலாளர்கள் சமூகத்தை வழி நடாத்துகிறார்கள், வழி நடாத்தவில்லை' என்ற தலைப்பிலான சுவாரஷ்யமான பட்டிமன்றமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்பட்டிமன்றத்தின் நடுவராக புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்கள் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.