Monday, May 11, 2015

சஜீன் வாஸ் குணவர்தனவுக்கு 20ஆம் திகதி வரை விளக்கமறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன் வாஸ் குணவர்தனவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்த்தனவிடம் விசாரணைகளை மேற்கொண்ட குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்,  இன்று திங்கட்கிழமை(11) அவரை கைது செய்தனர்.

இதையடுத்து அவரை கொழும்பு புதுக்கடை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திபோது  அவரை எதிர்வும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலக வாகன முறைகேடுகள் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Disqus Comments