கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் இதுவரையான கால பகுதியில் வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்பிற்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் விபத்துக்கிளினாலேயே அதிக உயிர் சேதங்கள் ஏற்படுகின்றதாக வீதி பாதுகாப்பிற்கான தேசிய சபையின் செயலாளர் டாக்டர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் மற்றும் பாதசாரிகள் விபத்துக்களில் அதிகமாக உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 4 மாதங்கள் வரையிலான காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 936 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கவனயீனம் காரணமாக வாகனம் செலுத்துகின்றமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துவதினாலேயே அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக வீதி பாதுகாப்பிற்கான தேசிய சபையின் செயலாளர் டாக்டர் சிசிர கோத்தாகொட மேலும் தெரிவித்துள்ளார்.